அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படும் • வேதசத்தி மருத்துவம் • சித்த மருத்துவம் • புற மருத்துவம் • தொக்கணம் • நோய் கணித்தல் • நோயில்லா நெறி •

இங்கு நவீன கால நோய்களின் சிகிச்சைகளுக்கு பண்டைய கால மருத்துவமுறைகள் நவீனமாய் ஆக்கப்பட்டுள்ளது.

Dr. Geethanjali
14+
Years
Experience
சித்த மருத்துவ பேரறிஞர்

மரு. கீதாஞ்சலி MD(s), DIV, DIP, DYHE

அரசினர் சித்த மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டை

4.8 (320 reviews)
Available Today

நான் மரு. கீதாஞ்சலி. சித்த மருத்துவத் துறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட மருத்துவராக பணியாற்றி வருகிறேன். நோயாளிகளின் உடல் நலத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்காக பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறேன்.

மருத்துவர் என்பவருக்கு உடல், நாடு, காலம், நோய்க்கான மருந்து முதலியவற்றை அறிதல், நோய்க்குத் தக்க உணவுப்பொருள்களின் விதியுணர்தல், உடலுக்கு வன்மை தரும் பொருள் இன்னவையெனத் தெளிதல்,அவரவர் உடல் வன்மையுணர்தல், நோயாளியின் பசித்தீயின் அளவறிதல், உணவு கொடுக்கும் விதியறிதல் ஆகியவற்றையெல்லாம் நன்குணர்ந்தவளாய் இருந்தல் இன்றியமையாத்தாகும்.

3,200+
சிகிச்சை பெற்ற நோயாளிகள்
18
ஆராய்ச்சி வெளியீடுகள்
95%
திருப்தி விகிதம்

நோய் காரணங்கள்



"தன்வினை புறவினை தாழினும் மிகினும்
உடலைப் பிணிக்கு முண்மையிது தாமே"
-கையெழுத்துப்பிரதி


அகக்காரணம், புறக்காரணம் இவைகள் மிகினும், குறையினும் நோய் சம்பவிக்கும் என்பர். அதாவது உணவு பொருட்களை அளவு கடந்து உண்ணல், அல்லது உடற்கு வேண்டிய அளவு கொள்ளாது சிறு உணவு கொள்ளல், தன் வண்மைக்கு மிகுந்து உழைத்தல் (அ) வேலை ஒன்றுமில்லாது சோம்பிக்கிடத்தல் ஆகிய இவ்விருவகைக் காரணங்களால் வளி, அழல், ஐயம் மூன்றும் தத்தம் நிலையில் மிகுந்தேனும் குறைந்தேனும் பிணிக்கப்படும் அப்போது தேகத்தின்கண் உண்டாம் குறிகுணங்களை நோய், பிணி, வியாதி வினை. தாதுதோட வேறுபாடு (அசவுக்கி) எனப் பல பெயர்களால் அழைக்கப்படும்.

Treatment

மருத்துவம்

துன்பத்தை வேரறக் களைந்து பிணி, மூப்பு சாக்காடு என்னும் இவற்றை யொழிந்து வாழக்கூடிய அறிவை புகட்டுதலும், உடலின் உயிர் எக்காலமும் நன்னிலையில் தரித்திருக்கக் கூறும் முறையே மருத்துவமாகும்.

தமிழ் மருத்துவத்தின் பரிகார முறைகள் சி.ம.சு – 651

தமிழ் மருத்துவ நூல் வழியாய் அறியக்கிடக்கும் மருத்துவமுறை மூவகைப்படும்

வகை 01
தேவ மருத்துவம்
வகை 02 · தேர்ந்தெடுக்கப்பட்டது
மானிட மருத்துவம்
வகை 03
நிசாசர மருத்துவம்

மானிட மருத்துவம்

நிலவுலகில் வாழும் மக்களுக்கான மருத்துவமுறை

நிலவுலகில் வாழும் மக்கட்டு செய்யும் மருத்துவம். மேற்கூறியது போலவே மருந்து முறைகளின் பெயர்களைக் கொண்டு இப்பெயர் பெற்றது.

தாவர மூலம் தயாரிக்கப்பட்ட மருந்து வகைகள்

குடிநீர் சூரணம் சுரசம் பிட்டு வடகம் இளகம் மணப்பாகு மாத்திரை

இவை தாவரங்களைக் கொண்டு செய்யப்பட்டு பிணிகளைப் பரிகரிக்கும் முறைகளாகும். மூலிகை மருந்துகளால் தீராத நோய்களை பற்ப செந்தூரங்கள் மூலம் தீர்க்க வேண்டும்.

மூல வாக்கு
"வேர் பாகு தழை பாரு மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல
பற்ப செந்தூரம் பாரு"

மூலிகைகளால் செய்யப்பட்ட மருந்துகளால் தீராத பிணிகளைப் பற்ப செந்துரங்களால் தீர்க்க வேண்டும்.

Ready to Start Your Healing Journey?

Book a personalised consultation with our Siddha specialist and receive a complete body constitution analysis.

Book Consultation

Fill in your details and our Siddha specialist will contact you shortly.

செய்யப்படுகிற மருத்துவ முறைகள்

நோய் கணித்தல்
01

நோய் கணித்தல்

நோயின் தன்மை, கால அளவு, குறிகுணங்கள் இவற்றை சிந்தித்து தற்போதைய நவீன மருத்துவ நடைமுறைகளை அனுசரித்து, நமது பாரம்பரிய நூல்களில் காணப்படும் குற்ற வேறுபாடு, எண்வகை தேர்வுகளால் நோய் கணிப்பு செய்யப்படுகிறது.

  • புறக்காரணங்கள்
  • ஏழு உடற்தாதுக்கள்
  • எண்வகை தேர்வு
  • மணிக்கடை நூல்
சித்த மருத்துவம்
02

சித்த மருத்துவம்

சித்தம் என்ற சொல், முழுமையான அறிவு அல்லது நிறைவைக் குறிக்கும் "சித்தி" என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது.

அக மருத்துவம்:
அக மருத்துவம்
  • சுரசம்
  • குடிகீர்
  • சூரணம்
  • மணபாகு
  • நெய்
  • மெழுகு
  • பதங்கம்
  • பற்பம்
  • செந்தூரம்
  • இரசாணம்
  • இளகம்
  • எண்ணெய்
  • மாத்திரை
  • பக்குவம்
  • தேனூறல்
  • தீநீர்
  • கற்பம்
புற மருத்துவம்:
புற மருத்துவம்
  • ஒற்றடம்
  • தொக்கணம்
  • வேது
  • பொட்டணம்
  • பொடிதிமிர்தல்
  • கலிக்கம்
  • பற்று
  • பூச்சு
  • களிம்பு
  • நீர்
  • பொடி
  • நசியம்
வேதசக்தி மருத்துவம்
03

வேதசக்தி மருத்துவம்

வேதசக்தி மருத்துவம் அல்லது வேதசத்தி வர்மம் என்பது நம் உடலின் உயிர் ஆற்றலை மேம்படுத்தும் ஒரு பண்டைய மருத்துவ முறையாகும்.

04

நோயில்லா நெறி

"அற்றதறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்கத் துவரப் பசித்து"

நோய் வராதிருக்க உடல் அடைந்த வேறுபாடுகளையும், கால நிலைகளின் தட்ப வெப்ப மாறுபாடுகளை நன்கு அறிந்து அதற்கு பின் நமது உடலின் செரிப்புத் தன்மைக்கு ஏற்றவாறு உணவுமுறைகளும், தின ஒழுக்கத்தையும் கூறுகிறது.

SUCCESS STORIES

Patient Case Studies

Real patient journeys, successful treatments, and life-changing healthcare outcomes.

Dermatology

Whole-Body Itching with Hyperpigmented Lesions

A 42-year-old patient with 6 months of severe nocturnal itching and hyperpigmented lesions achieved full symptom resolution.

Patient Age
42 Years
Recovery
45 Days
View Case Study →
Dermatology

Bilateral Leg Lesions with Nocturnal Itching

A 72-year-old patient with 4 months of leg lesions and nocturnal itching saw significant improvement and softened skin.

Patient Age
72 Years
Recovery
45 Days
View Case Study →
எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

எங்களின் சிறப்பம்சங்கள்

01

தனிப்பட்ட ஆலோசனை

ஒவ்வொரு சிகிச்சையும் உங்கள் உடல்நிலை மற்றும் தேவைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் விரிவான மதிப்பீட்டுடன் தொடங்குகிறது.

02

தனிப்பயன் சிகிச்சை

உங்கள் உடல் தன்மை மற்றும் ஆரோக்கிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு தனிப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

03

நீண்டகால குணமடைதல்

நிலையான குணமடைதல், முழுமையான நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும்.

சுகாதார சேவை