மானிட மருத்துவம்
நிலவுலகில் வாழும் மக்களுக்கான மருத்துவமுறை
நிலவுலகில் வாழும் மக்கட்டு செய்யும் மருத்துவம். மேற்கூறியது போலவே மருந்து முறைகளின் பெயர்களைக் கொண்டு இப்பெயர் பெற்றது.
தாவர மூலம் தயாரிக்கப்பட்ட மருந்து வகைகள்
இவை தாவரங்களைக் கொண்டு செய்யப்பட்டு பிணிகளைப் பரிகரிக்கும் முறைகளாகும். மூலிகை மருந்துகளால் தீராத நோய்களை பற்ப செந்தூரங்கள் மூலம் தீர்க்க வேண்டும்.
"வேர் பாகு தழை பாரு மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல
பற்ப செந்தூரம் பாரு"
மூலிகைகளால் செய்யப்பட்ட மருந்துகளால் தீராத பிணிகளைப் பற்ப செந்துரங்களால் தீர்க்க வேண்டும்.